Enable Javscript for better performance
தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி, பாத தரிசன நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
    திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ மதத்தில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் ஆழித் தேரோட்டம், திருவாதிரை திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது.
    திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவில் பதஞ்சலி வியாக்ரபாத முனிவருக்கு, தியாகராஜ சுவாமி தனது பாதத்தைக் காட்டி அருள்பாலிக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இடது பாதத்தையும், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் வலது பாதத்தையும் காட்டுவதாக பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திர விழா மார்ச் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் ரிஷபம், கஜ, வெள்ளி யானை, பூத வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
    விழாவில் முக்கிய நிகழ்வான பாத தரிசன நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி தியாகராஜருக்கு முசுகுந்த அர்ச்சனை, மகா அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. பின்னர், பதஞ்சலி முனிவருக்கு சிவபெருமான் தனது பாத தரிசனத்தைக் காட்டியதை குறிக்கும் வகையில், பாத தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.
    இதை முன்னிட்டு கோயிலில் முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை, மகா அபிஷேகம், அருள்மிகு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. மாலை 4 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai