Enable Javscript for better performance
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே திருமணத்துக்கு 15 நாள்கள் உள்ள நிலையில், பெண் மாயமானது குறித்து, போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    முத்துப்பேட்டை அருகேயுள்ள மருதங்காவெளியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகள் சண்முகசுந்தரி (19). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமணத்துக்கு இன்னும் 15 நாள்கள் உள்ள நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்து மாயமானார்.
    இவருக்கு, முத்துப்பேட்டையில் அகல ரயில் பாதைத் திட்டப் பணியில் வேலைப் பார்த்துவந்த கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த பாபு என்பவருடன் பழக்கம் இருந்து வந்ததாகவும், எனவே, சண்முகசுந்தரியை பாபு கடத்திச் சென்றிருக்கலாம் என அவரது தாயார் மாரியம்மாள் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai