Enable Javscript for better performance
மின்னணு நூலகத்தில் உறுப்பினராக அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்ட மைய நூலகம் வழியாக, தேசிய மின்னணு நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்தால், மின் நூல்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட மைய நூலகர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பாக தேசிய மின்னணு நூலகம் என்ற இணைய வழி டிஜிட்டல் நூலகம் கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. தற்போது இந்த தேசிய மின்னணு நூலகத்தில் திருவாரூர் மாவட்ட மைய நூலகமும் இணைந்துள்ளது. அதன்படி, மைய நூலகம் வழியாக உறுப்பினராக சேர்ந்தால் கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்யக் கூடிய மின் நூல்களை கூட, இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    விருப்பம் உள்ளவர்கள் தங்கள் செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியை மைய நூலகத்தில் பதிவு செய்தால் உடனடியாக தேசிய மின்னணு நூலகத்தில் உறுப்பினராக சேர்க்கப்படுவர். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. உறுப்பினராக சேர்ந்த பின்னர் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து தங்களுக்கு வழங்கப்பட்ட உள் நுழைவு பாஸ்வேடு மற்றும் ரகசிய குறியீடு மூலம் விரும்பிய புத்தகங்களை பி.டி.எப். மற்றும் ஆடியோ வடிவிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai