Enable Javscript for better performance
காவிரி போராட்டங்களுக்கு நுகர்வோர் இயக்கம் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசியல் சார்பற்ற காவிரி போராட்டங்களுக்கு ஆதரவு அளிப்பது என நுகர்வோர் இயக்கம் முடிவு செய்துள்ளது.
    திருவாரூரில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் மாதாந்திர கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.
    கூட்டத்தில் பொதுச்செயலர் ரமேஷ், அமைப்புச் செயலர் அழகிரிசாமி, பொருளாளர் நாகராஜ், இணைச் செயலர்கள் காளிமுத்து, சுபாஷ்காந்தி, ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    தீர்மானங்கள்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிப்பதுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய, மாநில அரசுகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காவிரி அறப்போராட்டத்துக்கு நுகர்வோர் இயக்கம் முழு ஆதரவு அளிப்பது, ஆயுள் காப்பீட்டுக்கான முதிர்வுத்தொகை மீதான வருமான வரியை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும். திருவாரூர் கமலாலயக் குளம் சுற்றுச்சாலைகளில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவது தடைசெய்ய வேண்டும். மேலும் விளமல் கடைவீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.
    நுகர்வோர் காவலர் பிறை. அறிவழகனின் நினைவு தினமான ஏப்.23-ஆம் நாளை நுகர்வோர் நல தினமாக கொண்டாடுவதோடு, விழிப்புணர்வு பிரசாரம், கருத்தரங்கம், நூல் வெளியீடு மற்றும் சிறந்த சேவை புரியும் சேவையாளர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பது, கர்ப்பிணிகளுக்கு அயோடின் நுண்சத்து உரிய அளவில் கிடைக்க அயோடின் கலந்த அரசு உப்பு, சுகாதார நிலையங்கள் மூலம் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai