Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மன்னார்குடியில் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மன்னார்குடியில் உண்ணாவிரதம்

    By DIN  |   Published on : 02nd April 2018 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து, மன்னார்குடியில் இந்திய மருத்துவக் கழகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டமும், வடுவூரில் பொது அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    இந்திய மருத்துவக் கழகம் மன்னார்குடி, நீடாமங்கலம் வட்டக் கிளை சார்பில் மன்னார்குடி மேலராஜவீதி பெரியார் சிலை அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கிளைத் தலைவர் மருத்துவர் என். நாகராஜன் தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தை மருத்துவக்கழக மாநிலத் தலைவர் கனகசபாபதி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச் செயலர் காவிரி எஸ். ரெஙகநாதன் உண்ணாவிரத்தை முடித்து வைத்தார்.இதில், மாநில கழகத்தின் நிர்வாகிகள் மருத்துவர்கள் புலிகேசி, குலோத்துங்கன், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் மருத்துவர்கள் சிவபாலன், லெனின், மன்னார்குடி கிளைச் செயலர் மருத்துவர் ஏ. வினோத்,பொருளாளர் வீ.காரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தை ஆதரித்து அரசியல் கட்சித் தலைவர்கள்,பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், தன்னார்வ நிறுவனத்தினர் பேசினர்.
    வடுவூர்: வடுவூரில் மன்னார்குடி- தஞ்சை பிரதானசாலை அண்ணாசிலை அருகே, வடுவூர் வளர்ச்சிக்குழு, இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் வளர்ச்சிக்குழுத் தலைவர்  ரவி தலைமையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று மத்தியஅரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai