Enable Javscript for better performance
சந்தானராமர் கோயிலில் திருக்கல்யாணம்- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் ஸ்ரீராமநவமி பிரம்மோத்ஸவத்தின் 6-ஆம் திருநாளான சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
    இக்கோயிலில் ஸ்ரீராமநவமி பிரம்மோத்ஸவம் நடைபெற்றுவருகிறது.
    இதையொட்டி நாள்தோறும் சீதா,லெட்சுமண,அனுமன் சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றுவருகிறது.
    விழாவின் ஆறாம் திருநாளான சனிக்கிழமை திருகல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி, காலையில் அபிஷேக ஆராதனைகளும் அலங்காரமும் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
    மாலையில் சீதாபிராட்டியார் சமேத சந்தானராமருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
    தொடர்ந்து,இரவில் யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai