Enable Javscript for better performance
அரசு ஊழியர் சம்மேளன தேசிய மாநாடு: அழைப்பிதழ் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் 16-ஆவது தேசிய மாநாட்டில் பங்கேற்க, கூத்தாநல்லூர் வட்டாட்சியருக்கு திங்கள்கிழமை அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்  தலைவர் எஸ். தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் இந்த அழைப்பிதழை வட்டாட்சியர் செல்வியிடம் வழங்கினர்.
    பின்னர், எஸ். தமிழ்ச் செல்வன் கூறியது:
    தமிழ்நாட்டில் உள்ள அரசு  ஊழியர்களின்  உரிமைகளுக்காக, தமிழ்நாடு அரசு ஊழியர் இயக்கம் செயல்படுவது போல், ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படும் ஊழியர் சங்கங்கள்  இணைந்து, இந்தியா முழுமைக்கும், அரசு  ஊழியர்களுக்கான  ஒரு  அமைப்பாக , அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம்  இயங்கி  வருகிறது. இச்சங்கத்தின் 16-ஆவது  தேசிய  மாநாடு, சென்னையில்  வரும் 5, 6, 7 மற்றும்  8-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
    இந்த மாநாட்டில், பழைய  ஓய்வூதியத் திட்டத்தை  அமல்படுத்தக் கோருதல்,  சிறப்பு  காலமுறை  ஊதியம்  பெறும்  ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிடப்பட உள்ளது என்றார்.  
     வருவாய்த் துறை  கிராம  உதவியாளர்  சங்க மாவட்டச்  செயலாளர்  கே. சந்திரசேகரன், வட்டச்  செயலாளர்  ஜி. கௌதமன், வட்டப் பொருளாளர்  ஆர். முத்துகிருஷ்ணன், வட்டத் தலைவர்  ஏ. அமிர்தராஜ்  உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai