Enable Javscript for better performance
இருவரைத் தாக்கிய 5 பேர் மீது வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் அருகே சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தி, இருவரைத் தாக்கியதாக 5-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    நீடாமங்கலம் அருகேயுள்ள சோணாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் கனிஷ்கர் (22). இவரும் இவரது நண்பர் மணியரசனும் கடந்த 30-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் சென்று கொண்டிருந்தார்களாம். அப்போது அதே ஊரைச் சேர்ந்த விக்னேஷ், வீரக்குமார், சிவசங்கர், பிரகதீஷ் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட சிலர் வழிமறித்து சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி, அவர்களைத் தாக்கினார்களாம். இதுதொடர்பாக நீடாமங்கலம் காவல்நிலையத்தில் கனிஷ்கர் அளித்த புகாரின்பேரில், மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai