Enable Javscript for better performance
உண்ணாவிரதத்தில் பங்கேற்க விவசாயிகள், பொதுமக்களுக்கு அமைச்சர் காமராஜ் அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    உண்ணாவிரதத்தில் பங்கேற்க விவசாயிகள், பொதுமக்களுக்கு அமைச்சர் காமராஜ் அழைப்பு

    By DIN  |   Published on : 03rd April 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் செவ்வாய்க்கிழமை (ஏப்.3) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று ஆதரவு அளிக்க வேண்டும் என கட்சியின் மாவட்டச் செயலரும், தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர். காமராஜ் அழைப்பு விடுத்துள்ளார். 
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் ஜீவநதியாக விளங்குவது காவிரி. மன்னர்கள் காலம் தொட்டு ஆங்கிலேயர்கள் காலம் வரை போற்றி பாதுகாத்து வந்த காவிரி நீர் உரிமையை, கருணாநிதி தலைமையிலான திமுக அரசு விட்டுக் கொடுத்து தமிழகத்துக்கு துரோகம் செய்தது. காவிரி நீர் பிரச்னையை தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என முதன் முதலாக எம்ஜிஆரால் கோரிக்கை விடுக்கப்பட்டு, அதன்படி காவிரி தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இதையடுத்து சட்டப் போராட்டம் நடத்தி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தார். தற்போது உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு வந்தபோதும், மத்திய அரசு அதை செயல்படுத்த மறுக்கிறது. இதை தமிழக அரசோடு இணைந்து தட்டிக்கேட்க வேண்டிய திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுயநலத்துடன் செயல்படுகின்றனர்.
    இதற்கு ஒரு இறுதித் தீர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிவிப்பின்படி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும், காவிரிநீர் முறைபடுத்தும் குழுவை உடனடியாக அமைக்க கோரியும், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டக் கோரியும், தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும் தமிழக விவசாயிகளின் நலன்களை காக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை (ஏப்.3) காலை 8 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. எனவே, உண்ணாவிரதத்தில் அனைத்து விவசாயிகளும் பொதுமக்களும் அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள் பங்கேற்று ஆதரவு அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai