Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானம்

    By DIN  |   Published on : 03rd April 2018 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி, மன்னார்குடி நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    பழைய தஞ்சை சாலை சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலர் எ. அறிவுக்கொடி தலைமை வகித்தார்.
    வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, நகராட்சிக்கு உள்பட்ட 33 வார்டுகளில் "வேர்களை தேடி' என்ற நிகழ்ச்சியைத் தொடங்குவது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயலைக் கண்டிப்பது, மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.த. செல்வம், நெறியாளர் தி.ச. திருமார்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்டப் பொருளாளர் ஆ. வெற்றி, மாவட்டத் துணைச் செயலர் ச. முல்லைவளவன், மாவட்டச் செய்தித் தொடர்பாளர் சுரேசு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலத் துணைச் செயலர் ரா. ரமணி, நகரப் பொருளாளர் தீபக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai