Enable Javscript for better performance
காவிரி விவகாரம்: மீனவத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூரில் மீனவத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
     மீன் விற்பனையாளர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீனவர்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்த வேண்டும். 
    மீனவர் கூட்டுறவு சங்கத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். உள்நாட்டு மீனவர்களுக்கு மீன்பிடியில்லா காலத்தில்  நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்க  மாநில  துணைச் செயலர் பி. சின்னதம்பி  தலைமை வகித்தார்.
      இதில்  டாஸ்மாக் சங்க மாவட்டச்  செயலர் கே. ராமச்சந்திரன், ஏஐடியுசி வங்கி ஊழியர் சங்க நிர்வாகி என். காளிமுத்து உள்ளிட்ட  பலர்  பங்கேற்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai