Enable Javscript for better performance
கூட்டுறவுத் துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவுத் துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 03rd April 2018 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் அலுவலர்களாக செயல்படும் கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு நெருக்கடி தருவதைக் கண்டித்து திருவாரூரில்  தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்  திங்கள்கிழமை நடைபெற்றது.
    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் குமாரசாமி  தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மனோகரன் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. பைரவநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டச் செயலர் எஸ். தியாகராஜன், சிஐடியு மாவட்டச் செயலர் டி. முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     கூட்டுறவு சங்கத் தேர்தலில் அரசியல் தலையீட்டை தவிர்க்க வேண்டும். கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு நெருக்கடி அளிக்கக் கூடாது. தேர்தல் அலுவலர்களாக செயல்படும் ஊழியர்களை நிர்பந்திக்காமல், நேர்மையான முறையில் தேர்தல் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai