Enable Javscript for better performance
கூட்டுறவு சங்கத் தேர்தல்: திமுக, அமமுக உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் வட்டம், திருராமேஸ்வரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தல் அதிகாரியைக் கண்டித்து, திமுக மற்றும்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் திங்கள்கிழமை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினர்.
    மன்னார்குடி திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஐ.வி. குமரேசன் தலைமையில் தொடங்கிய இப்போராட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஒன்றிய துணைச் செயலாளர் எம். சேகர், ஒன்றிய விவசாய அணி சி. முருகேசன் மற்றும் திமுக ஒன்றியப் பொருளாளர் டி. ஜெகஜீவன்ராம், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர்  எஸ். கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
    இப்போராட்டம் குறித்து ஐ.வி. குமரேசன் கூறியது:
    கூத்தாநல்லூர் வட்டம், திருராமேஸ்வரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில், திமுக சார்பில் மட்டும் 17 பேர் வேட்பு மனுத் தாக்கல்  செய்துள்ளனர். மறுநாள் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்ய வேண்டிய தேர்தல் அதிகாரி, மார்ச் 27- ஆம்  தேதி  இரவு  9 மணி  வரை அலுவலகத்துக்கு  வரவில்லை. அதிமுகவினர், தங்கள் அணியைச் சேர்ந்த 11 பேரை, போட்டியின்றி தேர்வு செய்து விட்டதாக, இரவோடு இரவாக அறிவித்துள்ளனர். 
    எனவே அதிமுக மற்றும் தேர்தல்  அதிகாரியைக் கண்டித்து இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம் என்றார்.
    இப்போராட்டத்தில் திருராமேஸ்வரம், வடகோவனூர், தென் கோவனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai