Enable Javscript for better performance
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது

    By DIN  |   Published on : 03rd April 2018 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது என மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 
    மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாரூர் மாவட்ட மதிமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் எக்காரணத்தைக் கொண்டும் நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது, முல்லை பெரியாறுக்கு, இடுக்கி அணைக்கு, பொதுமக்களுக்கு மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தையும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வரும் கட்சியின் பொதுச் செயலர் வைகோவுக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்வது, மதிமுகவினரின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், திமுகவுடன் கூட்டணி என்ற கட்சித் தலைமை எடுத்துள்ள முடிவை வரவேற்பது, கட்சி பிரசார நூல்களுக்கு சந்தா சேர்ப்பது, மாவட்ட இளைஞரணிக்கு என இணையதள வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    கட்சியின் மாவட்டச் செயலர் பி. பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலர் சீனிவாசன், தலைமைக் கழகப் பேச்சாளர் சோமநாதன், நகரச் செயலர் சண். சரவணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப. செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai