Enable Javscript for better performance
பயிர்களை பாதுகாக்க கால்நடைப் பட்டி அமைக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் அருகே பயிர்களை கால்நடைகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில், பட்டி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    திருவாரூர் அருகேயுள்ள ஆய்குடி, வேளுக்குடியைச் சேர்ந்த மக்கள்,  மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜிடம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்: திருவாரூர் அருகே கீழகண்ணுசாங்குடி, மேலகண்ணுசாங்குடி, நீர்மங்களம், கோட்டகம், புதுக்குடி, தென்பாதி, வடபாதி, ஆய்குடி, சேகரை, குனுக்கடி, வேளுக்கடி ஆகியப் பகுதிகளில் ஆழ்குழாய் உள்ள இடங்களில்  உளுந்து மற்றும் பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
    பயிரிடப்பட்ட அனைத்து இடங்களிலும் வேலி அமைத்து  பாதுகாக்க பெருந்தொகை செலவாகிறது என்பதால், எங்கும் வேலி அமைக்கவில்லை. இப்பயிர்களை பகல் மற்றும் இரவில் ஆடு, மாடுகள் மேய்ந்து சேதத்தை ஏற்படுத்துகின்றன. கோடை காலம் என்பதால் பலர் மாடுகளைகட்டுவதில்லை. சாகுபடி பயறுகளை எப்படி காப்பாற்றுவது என தெரியவில்லை. எனவே, பயிர்களை மேயும் கால்நடைகளை பிடித்து கட்டும் வகையில் பட்டி அமைக்க வேண்டும். 
    கிராம நிர்வாக அலுவலர் மேற்பார்வையில் கால்நடை உரிமையாளரிடம் அபராதம், தீனிச்செலவு போன்றவற்றை வசூலித்து அரசு கருவூலத்தில் செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai