Enable Javscript for better performance
மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 2.40 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 2.40 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

    By DIN  |   Published on : 03rd April 2018 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வழங்கினார்.
     திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் பட்டா மாறுதல்,  புதிய குடும்ப அட்டை,  ஆக்கிரமிப்பு அகற்றுதல்,  கல்விக் கடன்,  வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 205 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. 
      இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, குறித்த காலத்துக்குள் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
    இதைத்தொடர்ந்து, தாட்கோ மூலம் சுய தொழில் தொடங்குவதற்காக மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ்  12 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
     கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி,  தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஏ. மலர்கொடி, தாட்கோ மாவட்ட மேலாளர் அன்பழகன் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai