Enable Javscript for better performance
லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஓட்டுநர்கள் நலச் சங்கம் சார்பில் திங்கள்கிழமை கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    வ.உ.சி. சாலை நகராட்சி அலுவலகத்தில் சமூக ஆர்வலர் இமயவீரன், இந்தப் பேரணியைத் தொடங்கி வைத்தார். பின்னர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்த பேரணி, மேலராஜவீதி, தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நிறைவுபெற்றது.
    இதைத்தொடர்ந்து, அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எம். ராஜ்குமார் தலைமை வகித்தார். இதில், செயலாளர் ஜி. சாமிநாதன், பொருளாளர் எஸ். செந்தில்குமார், ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் மணிமாறன், செயலாளர் கார்த்தி, வர்த்தகர் சங்கத் தலைவர் பாரதிஜீவா, மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் நிர்வாகி டி. ஜீவானந்தம், சமூக சேவை நிர்வாகி இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai