Enable Javscript for better performance
வர்த்தகர் சங்கம் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகேயுள்ள பெருகவாழ்ந்தானில் வர்த்தகர் சங்கம் சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
    கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கும், இதற்கு துணைபோகும் தமிழக அரசுக்கும் மற்றும் கோட்டூர் ஒன்றியத்துக்குள்பட்ட கோட்டூர், பெருகவாழ்ந்தான் உள்ளிட்ட 52 ஊராட்சிகளில் சாலைகள் மேம்படுத்தாமல் இருப்பது, சீரான மின்விநியோகம் செய்யாதது, அதிகரித்து வரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாதது உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகளை சரி செய்யாமல் மெத்தனப் போக்குடன் நடந்துகொள்ளும் ஒன்றிய ஆணையர்கள், அலுவலர்களால் நிர்வாகச் சீர்கேடு அடைந்துள்ள கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  
    சங்கத் தலைவர் பா. சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை, சங்க கௌரவத் தலைவர் சுப்பிரமணியபிள்ளை தொடங்கி வைத்தார். சங்க முன்னாள் செயலர் அங்கப்பமுதலியார் முடித்துவைத்தார். இதில், நாகை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், திமுக ஒன்றியச் செயலர் தேவதாஸ், தமாகா மாவட்ட துணைத் தலைவர் சண்முகம், வர்த்தகர் சங்கச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai