Enable Javscript for better performance
வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு விழா- Dinamani

சுடச்சுட

    

    வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு விழா

    By DIN  |   Published on : 03rd April 2018 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    இக்கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கியது. எட்டாம் திருநாளான பாடைக்காவடி விழா கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பாடைக்காவடி, பால்காவடி, அலகுக்காவடி உள்ளிட்ட பல்வேறு காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    புஷ்ப பல்லக்கு விழா: பங்குனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான புஷ்ப பல்லக்கு விழா, கடந்த 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை முதல் திரளான பக்தர்கள் பாடைக்காவடி, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடனைச் செலுத்தினர். இரவு புஷ்ப பல்லக்கில் மகாமாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    18-க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாகசுவர கலைஞர்களின்  இன்னிசை வாத்தியங்கள் முழங்கிட, நகரின் முக்கிய வீதிகள் வழியாக திங்கள்கிழமை காலை புஷ்ப பல்லக்கு கோயிலை வந்தடைந்தது. இதை முன்னிட்டு வலங்கைமான் நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
    பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில், நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அருண் மேற்பார்வையில், வலங்கைமான் போலீஸார் செய்திருந்தனர்.
    விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் ஆய்வர் எஸ். தமிழ்மணி, செயல் அலுவலர் க. சிவகுமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். இக்கோயிலில் கடைஞாயிறு விழா வரும் 8-ஆம்தேதி நடைபெறவுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai