Enable Javscript for better performance
அகோரவீரபத்திர சுவாமி கோயிலுக்கு புனித நீர் ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் வட்டம், மேல்கொண்டாழியில் அருள்பாலிக்கும் அகோரவீரபத்திர சுவாமி, அங்காளப்பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புனித நீர் ஊர்வலமாக செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டது.
    அகமுடையார்  சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (ஏப்.5) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    இதையொட்டி, செவ்வாய்கிழமை (ஏப்.3) காலை மருளானிகள் சங்கல்பம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மகா கணபதி  யாகம், அஷ்டலட்சுமி  யாகம்,  நவகிரக யாகம்  நடத்தப்பட்டன.
    பின்னர், அகோரவீரபத்திர சுவாமி கோயில் அருகேயுள்ள, காளியம்மன்  கோயிலில்,   கங்கை  நீர் நிரப்பப்பட்ட  கலசத்துக்கு சிறப்பு  பூஜைகள்  செய்யப்பட்டு  ஊர்வலமாக அகோரவீரபத்திர சுவாமி  கோயிலுக்கு  கொண்டு வரப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
    கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் ஏ.கே.கே. மூர்த்திகுமார், பேராசிரியர்  வி.கே. பூமிநாதன்,  தலைமையாசிரியர் எஸ். ஜெகதீசன், சமூக ஆர்வலர்கள்  சாம்பசிவம், உதயகுமார்  உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai