Enable Javscript for better performance
கத்திக்குத்தில் காயமடைந்தவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்டவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
    மன்னார்குடி மாளிகைமேடு தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பா மகன் கூலித்தொழிலாளி வேம்பையன்(34). எடமேலையூர் தெற்கு நடுத்தெருவைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் சுபாஷ் சந்திரபோஸ் (51). இவர், மாளிகைமேடு பகுதியில் பால் வியாபாரம் செய்துவந்தார்.
    இந்நிலையில், மாளிகைமேடு அருகேயுள்ள விழல்காரத்தெருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மாரியம்மன்கோயில் திருவிழாவில் சுபாஷ் சந்திரபோஸுக்கும் வேம்பையனுக்கும் தகராறு ஏற்பட்டது.
    இதில் ஆத்திரமடைந்த சுபாஷ் சந்திரபோஸ், கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த வேம்பையன், சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
     இதுகுறித்து, மன்னார்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து, சுபாஷ் சந்திரபோஸை திங்கள்கிழமை கைது செய்தனர். இந்நிலையில், வேம்பையன் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai