Enable Javscript for better performance
கனகாங்கித மகாமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் அருகேயுள்ள லெட்சுமாங்குடி கனகாங்கித மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.  
    லெட்சுமாங்குடி கம்பர் தெருவில் எழுந்தருளியுள்ள கனகாங்கித மகா மாரியம்மன் கோயிலில் மகோத்ஸவ உத்ஸவம்  நடைபெறுகிறது. இதையொட்டி, கனகாங்கித மகா மாரியம்மனுக்கு, மஞ்சள் பொடி, பன்னீர், தயிர், இளநீர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இரவு அம்பாள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிதார். செவ்வாய்க்கிழமை கனகாங்கித மகாமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு கஞ்சி வார்த்தல் நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai