Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    By DIN  |   Published on : 04th April 2018 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருவதை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை இதேகோரிக்கையை வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பு செய்து கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி கோஷம் எழுப்பினர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai