Enable Javscript for better performance
காவிரி விவகாரம்: திருவாரூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் கடைகள் அடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரம்: திருவாரூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் கடைகள் அடைப்பு

    By DIN  |   Published on : 04th April 2018 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    இதையொட்டி திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், கொரடாச்சேரி, வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 
    இதுகுறித்து பேரமைப்பின் திருவாரூர் மாவட்டத் தலைவர் வி.கே.கே. ராமமூர்த்தி கூறியது:
     திருவாரூர் மாவட்டத்தில் 63 இடங்களில் உள்ள சங்கங்களும் கடையடைப்பில் முழுமையாக ஈடுபட்டன. இதன்மூலம் 20 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து, திருவாரூரில் உள்ள சங்கங்களின் சார்பில் 1,000 பேர் தில்லிக்குச் சென்று, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்க உள்ளோம் என்றார்.
    மன்னார்குடியில்...
    மன்னார்குடியில் கீழப்பாலம், காளவாய்க்கரை, பேருந்து நிலையம், மேலராஜவீதி, பெரியக்கடைத்தெரு, காந்திஜீசாலை, பெரியகம்மாளத்தெரு என நகரின் பிரதான வர்த்தக பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. 
    ஆனால், சாலையோர தேநீர், தர்ப்பூசணி மற்றும் இளநீர் கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு, வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றது.
    நீடாமங்கலத்தில்...
    நீடாமங்கலத்தில் வர்த்தகர் சங்கத் தலைவர் பி.ஜி.ஆர். ராஜாராமன் தலைமையில், வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர். இதனால், தெருக்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai