Enable Javscript for better performance
கூட்டுறவு சங்கத் தேர்தல்: திமுக, அமமுகவினர் 2-ஆவது நாளாக உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு சங்கத் தேர்தல்: திமுக, அமமுகவினர் 2-ஆவது நாளாக உண்ணாவிரதம்

    By DIN  |   Published on : 04th April 2018 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூத்தாநல்லூர் வட்டம், திருராமேஸ்வரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக, திமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருராமேஸ்வரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, அச்சங்க அலுவலகம் முன்பு திமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.
     கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஐ.வி. குமேரசன் தலைமையில், அமமுக ஒன்றிய துணைச் செயலாளர்  எம். சேகர், திமுக  ஒன்றியப்  பொருளாளர்  டி. ஜெகஜீவன்ராம், ஒன்றிய  விவசாய  அணி அமைப்பாளர்  எஸ். கண்ணன்  உள்ளிட்டோர் முன்னிலையில் தொடங்கிய இப்போராட்டம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீடித்தது. இதில் திமுக மற்றும் அமமுகவைச் சேர்ந்த பலர் பங்கேற்றுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai