Enable Javscript for better performance
கூத்தாநல்லூர் வட்டத்தில் கடையடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, கூத்தாநல்லூர் வட்டத்தில் செவ்வாய்க்கிழமை முழு கடையடைப்பு நடைபெற்றது.
    வணிகர் சங்கப் பேரவை சார்பில், கூத்தாநல்லூர் வர்த்தகச் சங்கத் தலைவர் எம். ஜெயமணி, செயலாளர் விக்ரமன், பொருளாளர் சலீம், லெட்சுமாங்குடி வர்த்தகச் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ஜெயமணி சுவாமிநாதன், பொருளாளர் ராஜராஜன் உள்ளிட்ட  நிர்வாகிகள் கடையடைப்பை பார்வையிட்டனர்.
    கூத்தாநல்லூரில் பெரியக்கடைத் தெரு, மருத்துவமனைச் சாலை, திருவாரூர்- மன்னார்குடி பிரதான சாலை, கொரடாச்சேரி சாலை, வடபாதிமங்கலம் சாலை, அத்திக்கடை, பொதக்குடி, சேகரை, கமலாபுரம், வேளுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai