Enable Javscript for better performance
சந்தானராமர் கோயிலில் வெண்ணெய்த்தாழி உத்ஸவம்- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் ஸ்ரீராம நவமி பிரம்மோத்ஸவத்தில் எட்டாம் நாளான திங்கள்கிழமை வெண்ணெய்த்தாழி உத்ஸவம் நடைபெற்றது.
    நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் ஸ்ரீராம நவமி பிரம்மோத்ஸவம் நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் எட்டாம் திருநாளில் வெண்ணெய்த்தாழி பல்லக்கில் (நவநீத சேவையாக) சந்தானராமர் எழுந்தருளி வீதியுலா வந்தார். அப்போது, பக்தர்கள் வெண்ணெய் அளித்து, அர்ச்சனை செய்து, வழிபட்டனர்.
    தொடர்ந்து, குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் சந்தானராமர் திருவீதிப்புறப்பாடு இரவில் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai