Enable Javscript for better performance
சாலை மறியலில் ஈடுபட்ட அமமுகவினர் 25 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.  தினகரன் கைது செய்யப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்து பெருகவாழ்ந்தானில் சாலை மறியலில் ஈடுபட்ட அக்கட்சியைச் சேர்ந்த 25 பேரை போலீஸார் கைது செய்தனர். 
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் கட்சியினருடன் சென்று திருச்சி விமான நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்றபோது, போலீஸார் அவரை கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தான் பேருந்து நிலையம் அருகில் மன்னார்குடி - முத்துப்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அமமுக கோட்டூர் ஒன்றிய துணைச் செயலர் சங்கர் உள்ளிட்ட 25 பேரை கைது செய்தனர். இதனால் அவ்வழித்தடத்தில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai