Enable Javscript for better performance
தரமற்ற உணவு: பல்கலைக்கழக மாணவர்கள் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    கேண்டீனில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி, திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள் தர்னா போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
    திருவாரூர் மாவட்டம், நீலகுடியில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில், 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு மாணவர்களின் வசதிக்காக உணவகம் (கேண்டீன்) செயல்பட்டு வருகிறது.
    இந்த உணவகத்தில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றவையாகவும், உடல் நலத்தைப் பாதிக்கக் கூடிய ரசாயன வகைகள் கலந்திருப்பதாகவும் கூறி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மாணவர்கள் புகார் தெரிவித்து வந்தனராம். இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு, செவ்வாய்க்கிழமை மாணவர்கள் ஒன்று கூடி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    போராட்டத்தில், தற்போது உணவகம் நடத்துபவரின் உரிமத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நேர்மையான தரமான உணவு தயாரிக்கும் உணவக ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டன.
    மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள், உணவுப் பிரச்னையைத் தீர்க்கக் கோரி, கடந்த ஆண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புதிய உணவகத்துக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியது. தற்போது மீண்டும் உணவகப் பிரச்னை எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai