Enable Javscript for better performance
திருவாரூர் மத்தியப் பல்கலை.க்கு காலவரையற்ற விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை ரசாயனம் கலந்த உணவு வழங்குவதாக எழுந்த புகாரையடுத்து, பல்கலைக்கழகத்துக்கு புதன்கிழமை (ஏப்.4) முதல் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
    திருவாரூர் அருகே நீலக்குடியில் செயல்பட்டு வரும் மத்தியப் பல்கலைக்கழகத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களின் வசதிக்காக பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் உணவகத்தில் தரமான உணவு வழங்கப்படுவதில்லையென்றும், உடல் நலத்தை பாதிக்கும் ரசாயன வகைகள் கலந்த உணவு வழங்குவதாகவும், உணவகம் நடத்துபவரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி பல்கலைக் கழக நிர்வாக வளாகம் முன்பு செவ்வாய்க்கிழமை மாணவர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் புகாரைத் தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் எஸ். புவனேஷ்வரி அலுவலக விளம்பர பதாகையில் பல்கலைக்கழகத்துக்கு காலவரையற்ற விடுமுறை விடுப்பதாகவும், புதன்கிழமை காலை 11 மணிக்குள் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai