Enable Javscript for better performance
தீக்காயமடைந்த மூதாட்டி சாவு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே தீக்காயமடைந்த மூதாட்டி,  திங்கள்கிழமை உயிரிழந்தார்.
    பெருகவாழ்ந்தான் அருகேயுள்ள கெளுவத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்த கணேசன் மனைவி ஜக்குபாய் (73). இவர், கடந்த மார்ச் 27-ஆம் தேதி, வீட்டை சுற்றி குவிந்திருந்த குப்பைகளை சேகரித்து, எரித்தப்போது, எதிர்பாராதவிதமாக  ஜக்குப்பாயின் சேலையில் தீ பற்றியது. இதில், பலத்த தீக்காயமடைந்த ஜக்குப்பாய், சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.  இதுகுறித்து, பெருகவாழ்ந்தான் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai