Enable Javscript for better performance
மண்பாண்ட குடிநீர் சேவை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் செயல்பட்டு வரும் ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில், கோடை காலத்தை முன்னிட்டு, மண்பாண்ட குடிநீர் சேவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அந்த அமைப்பின் தலைவர் வி. அஞ்சறைப்பெட்டி ராஜேஷ் தலைமை வகித்தார்.
    சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மண்டலத் தலைவர் வி.எஸ். கோவிந்தராஜன் கலந்துகொண்டு, மண்பாண்டக் குடிநீர் சேவையைத் தொடங்கிவைத்தார்.
    இதேபோல், மூன்றாம் தெரு, குறுக்கு பத்மசாலவர் தெரு, காந்திஜி சாலை, திருமக்கோட்டை சாலை என நான்கு இடங்களிலும் குடிநீர் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
    நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர்கள் ஜி. செல்வகுமார், எஸ். ராஜகோபாலன், எஸ். ராஜ்மோகன், செயலாளர் எம்.வி. முத்தமிழ்ச்செல்வன், மகளிர் பிரிவு நிர்வாகி ஆர். துர்காதேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai