Enable Javscript for better performance
மன்னார்குடியில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, மன்னார்குடியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    மன்னார்குடி மேலராஜவீதியில் உள்ள தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி. பாலு தலைமை வகித்தார். 
    மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசியது: எந்த ஒரு திட்டம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறதோ, அது குறித்து குறிப்பிடும் போது ஸ்கீம் என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்படும். 
    ஆனால், இன்று ஸ்கீம் என்ற வார்த்தை திட்டத்தை குறிப்பிடுவதல்ல என புது விளக்கத்தை தலைமை நீதிபதி அளித்திருப்பதன் மூலம் காவிரி பிரச்னையில் தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்படுவதைக் காட்டுகிறது. அதிமுகவினர் நாடாளுமன்றத்தை முடக்கிப் போராடுவது, தமிழகத்தில் உண்ணாவிரதம் இருப்பது எல்லாம் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கான நாடகம் என்றார்.
    இதில், எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் எம்பி ஏ.கே.எஸ். விஜயன், முன்னாள் எம்எல்ஏ பி. ராஜமாணிக்கம், நகரச் செயலர் வீரா. கணேசன், மேற்கு ஒன்றியச் செயலர் க. தனராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கண். மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai