Enable Javscript for better performance
மன்னார்குடி கோயிலில்  நாளை தெப்ப உத்ஸவம்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை (ஏப்.5) நடைபெறுகிறது.
     இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாள்கள் நடைபெறும் பங்குனித் திருவிழா,நிகழாண்டு மார்ச் 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 24-ஆம் தேதி நிறைவடைந்தது.
    இதைத்தொடர்ந்து, 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி உத்ஸவம் மார்ச் 25-ஆம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு நாளான வியாழக்கிழமை, கிருஷ்ணதீர்த்தத்தில் தெப்ப உத்ஸவம் நடைபெறுகிறது.
     இதையொட்டி, கோயிலின் வலதுபுறம் உள்ள கிருஷ்ண தீர்த்தக் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தெப்பத்தில், வியாழக்கிழமை இரவு ருக்மணி, சத்யபாமா சமேதராக ராஜகோபாலசுவாமி எழுந்தருளி, தெப்பத்தில் மூன்றுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai