Enable Javscript for better performance
வடுவூரில் கோதண்டராமர் கோயில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகேயுள்ள வடுவூர் கோதண்டராமர் கோயிலின் ஸ்ரீராமநவமி திருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ரீராமநவமி பிரமோத்ஸவத்தையொட்டி, கடந்த மார்ச் 26-ஆம் தேதி கொடியோற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான, திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தேரில் சீதாதேவி, லெட்சுமணன் சமேதராக கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து கோயிலின் நான்கு வெளிப்
    பிராகாரங்களை சுற்றி இழுத்து வந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai