Enable Javscript for better performance
விவசாயிகள் போராட்டத்துக்கு உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகள் போராட்டத்துக்கு உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆதரவு

    By DIN  |   Published on : 04th April 2018 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயிகள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை (ஏப்.5) நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்பது என, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் மற்றும் என்.எம்.ஆர். ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு) முடிவு செய்துள்ளனர். 
    இச்சங்கத்தின் மாவட்ட கூட்டம் நீடாமங்கலத்தில் அண்மையில் நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவர் கே. கோவிந்தராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே. முனியாண்டி, சங்க நிர்வாகிகள் தனபால், தனுஷ்கோடி, விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    சங்க மாநிலத் தலைவர் நா. பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.
     தீர்மானங்கள்:  ஏப். 5- ஆம் தேதி விவசாயிகள் சங்கம் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் சங்கத்தின் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பது.
    மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை ஏப். 9-ஆம் தேதி முதல், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.       
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai