Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் கோரி நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் கோரி நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதம்

    By DIN  |   Published on : 05th April 2018 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் மன்னார்குடியில் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    மேலராஜவீதி தந்தை பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் வேதா. பாலமுருகன் தலைமை வகித்தார். போராட்டத்தை மாவட்டச் செயலர் ச. செல்வம் தொடங்கி வைத்தார். இதில், மாநில கொள்கைப் பரப்புச் செயலர் ஜெயசீலன், மாநில இளைஞர் பாசறை செயலர் கார்த்திக், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai