Enable Javscript for better performance
தமாகாவினர் கையெழுத்து இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ். தினகரன் தலைமை வகித்தார். இதில் நகரத் தலைவர் கார்த்திகேயன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் கங்கை செல்வதுரை, துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    திருவாரூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடம் கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. மேலும், கோரிக்கையை நிறைவேற்றக் கோரி பிரதமருக்கு மின்னஞ்சலும் அனுப்பப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai