Enable Javscript for better performance
நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் தேர் புறப்பாடு- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் சந்தானராமர் கோயில் ராமநவமி பிரமோத்ஸவத்தின் 9-ஆம் நாள் விழாவான செவ்வாய்க்கிழமை தேர் புறப்பாடு நடைபெற்றது.
    இக்கோயிலில் ராமநவமி பிரமோத்ஸவம் நடைபெற்று வருகிறது. 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. 
    மாலையில் தேரில் எழுந்தருளிய சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai