Enable Javscript for better performance
நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை பேரளம் மற்றும் கொரடாச்சேரி பகுதிகளில் ரயில் மறியல் செய்தனர். 
    மேலும், நீடாமங்கலம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவார்கள் என தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து, நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. 
    மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோகன், நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai