Enable Javscript for better performance
பள்ளியில் முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் வட்டம், லெட்சுமாங்குடி மரக்கடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், புதன்கிழமை விளையாட்டு விழா, ஆண்டு விழா மற்றும் புதிய மாணவர் சேர்க்கை விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்குப் பள்ளியின் பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் ம. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பி. அறிவழகன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வீ.விமலா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் த. ரவிச்சந்திரன் மற்றும் அருள் ஜெயசீலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    தலைமையாசிரியர் ரா. சாவித்திரி வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை ரமணி ஆண்டறிக்கை வாசித்தார்.
    கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர் வி.எஸ். வெங்கடேசன், லிட்டில்  பிளவர் பள்ளித் தாளாளர் பாலசுப்பிரமணியன், நுகர்வோர் சங்கத் தலைவர் கருணாநிதி, ஓய்வு பெற்ற அரசு  அதிகாரி வரதராஜன், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவி செய்யது அலி பாத்திமா, நாச்சியார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. உதவி ஆசிரியர் ந. மீனாட்சி நன்றி கூறினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai