Enable Javscript for better performance
மத்தியப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது- Dinamani

சுடச்சுட

    

    மத்தியப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது

    By DIN  |   Published on : 05th April 2018 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி நடைபெற்ற போராட்டம் புதன்கிழமை முடிவுக்கு வந்தது. 
    திருவாரூர் மாவட்டம், நீலகுடியில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு வெளியூரிலிருந்து தங்கி படிக்கும் மாணவர்களின் வசதிக்காக விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் வழங்கப்படும் உணவில் ரசாயனம் கலந்திருப்பதாகவும், இது மாணவர்களின் உடல்நலனை பாதிப்பதாகவும் கூறி, மாணவர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து எவ்வித முடிவும் எடுக்கப்படாத நிலையில் மாணவர்களின் போராட்டம் இரவும் தொடர்ந்தது.
    இதையடுத்து, பல்கலைக்கழகத்துக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டதுடன், விடுதி மாணவர்கள் புதன்கிழமை காலை 11 மணிக்குள் வெளியேற வேண்டும் என பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ். புவனேஸ்வரி தெரிவித்திருந்தார். ஆனால்,  மாணவர்கள் புதன்கிழமையும் போராட்டத்தை தொடர்ந்தனர். 
    இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுடன் நடத்திய சுமுகப் பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து பல்கலைக்கழகம் தரப்பில் பிரச்னைகள் முடிவுக்கு வந்ததால் விரைவில் வகுப்புகள் தொடங்கும் எனத் தெரிவித்தனர்.
    நாளை வகுப்புகள் தொடங்கும்: மாணவர்களின் போராட்டம் குறித்து நடவடிக்கை மேற்கொண்ட மத்தியப் பல்கலைக்கழக நிர்வாகம் வெள்ளிக்கிழமை (ஏப்.6) முதல் பல்கலைக்கழக வகுப்புகள் தொடங்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai