Enable Javscript for better performance
மாற்று மூலதன சாத்தியக்கூறுகளை ரயில்வே ஆராய வேண்டும்: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்- Dinamani

சுடச்சுட

    

    மாற்று மூலதன சாத்தியக்கூறுகளை ரயில்வே ஆராய வேண்டும்: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்

    By DIN  |   Published on : 05th April 2018 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்று மூலதன சாத்தியக்கூறுகளை ரயில்வே ஆராய வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் கேட்டுக் கொண்டுள்ளது.
    இதுதொடர்பாக தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 
    சாலைப் போக்குவரத்தில் ரூ.2,19,666 கோடி மதிப்பில்- 139 திட்டங்கள், மின்துறையில் ரூ.1,57,641 கோடி மதிப்பில்-14, கப்பல் துறையில் ரூ.53,160 கோடி மதிப்பில்- 12, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் ரூ.16,832 மதிப்பில்-5, ரயில்வே, விமானம், மற்றும் வர்த்தகத் துறையில் தலா- 3, பிற துறைகளில் சேர்த்து - 7 என மொத்தம் 186 திட்டங்கள் பொது- தனியார் பங்களிப்புத் திட்டங்களாக (பி.பி.பி) நாட்டில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ. 6 லட்சத்து 50 ஆயிரத்து 595 கோடி.
    குறிப்பாக, ரயில்வேயில் ரூ.2,170 கோடி மதிப்பில் 3 திட்டங்கள், சாலைப் போக்குவரத்தில் ரூ.2,19,666 கோடி மதிப்பில் 139 திட்டங்கள் நடைபெறுகின்றன. ரயில்வேயில் ரூ.3,217 கோடி, சாலையில் ரூ.1,392 லட்சம் கோடி பி.பி.பி. மூலதனமாக அரசு எதிர்பார்க்கிறது. அரசின் மொத்த பி.பி.பி. மூலதன எதிர்பார்ப்பு ரூ.1,866 லட்சம் கோடி.
    இரண்டு போக்குவரத்துத் துறைகளின் பி.பி.பி. திட்டங்களின் எண்ணிக்கை, முதலீடு மற்றும் எதிர்பார்ப்பு மூலதனம் ஆகியவற்றை ஒப்பிடுகையில், ரயில்வேயின் பொது தனியார் பங்களிப்புத் திட்டங்கள் முதலீட்டாளர்களை ஈர்க்கவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, ரயில்வே அதன் திட்டங்களுக்கு மாற்று மூலதன சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai