Enable Javscript for better performance
காவிரிக்காக அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    சங்க வட்டத் தலைவர் கே. இளமாறன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வட்டச் செயலர் ஜி. கௌதமன் தொடக்கவுரையாற்றினார். சங்க மாவட்ட இணைச் செயலர் ஏ. தனபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. அற்புதராஜ் ரூஸ்வெல்ட் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க வட்டச் செயலர் பி. பால சுப்பிரமணியன், வட்ட துணைத் தலைவர் எஸ். ஆறுமுகம், வட்டத் தலைவர் ஏ. அழகர், அரசு ஊழியர் சங்க முன்னாள் வட்ட த் தலைவர் எஸ். சின்னையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai