Enable Javscript for better performance
காவிரி உரிமைக்காக குளிக்கரையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 219 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவிரி உரிமைக்காக குளிக்கரையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 219 பேர் கைது

    By DIN  |   Published on : 06th April 2018 06:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், குளிக்கரையில் வியாழக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த 37 பெண்கள் உள்ளிட்ட 219 பேரை போலீஸார் கைது  செய்தனர்.  
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த மத்திய அரசை கண்டித்தும், தமிழக உரிமையை பெறத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும் திருவாரூர் மாவட்டம், குளிக்கரை ரயில் நிலையத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக, தமிழ்நாடு முஸ்ஸிம்லீக், விவசாய சங்கங்கள், வர்த்தகர் சங்கம் மற்றும் மாணவ அமைப்புகள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 
    குளிக்கரை ரயில் நிலையத்தில், எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் வரை செல்லும் காரைக்கால் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும், இதற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.  
    போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். இதில், திமுக மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், விவசாய சங்க மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் வடிவழகன், மாதர் சங்க மாவட்டச் செயலர் எம். கோமதி, மாவட்ட  மாணவர் சங்கத் தலைவர் எஸ். பிரகாஷ், சிஐடியு தொழிற்ச சங்க மாவட்டச் செயலர் டி. முருகையன் உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்றனர். 
    போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 37 பெண்கள் உள்ளிட்ட 219 பேரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai