Enable Javscript for better performance
காவிரி விவகாரம்: எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, திருவாரூரில் எல்ஐசி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
    திருவாரூர் எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஊழியர் சங்கத் தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். 
    இதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிற்சங்க மாநில துணைச் செயலர் ஜெ. குணசேகரன், முகவர் சங்க செயலர் டி.என்.தியாகராஜன், ஊழியர் சங்க நிர்வாகிகள் எஸ். பூங்குன்றன், பி. கமலவடிவேல், பி. சிவக்குமார், செயலர் எஸ். செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai