சாய்பாபா கோயில்களில் சிறப்பு பூஜை
By DIN | Published on : 06th April 2018 05:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கூத்தாநல்லூர் பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
லெட்சுமாங்குடியில் உள்ள ஷீரடி சாய்பாபா தியான பீடத்தில் சாய் பாபாவுக்கு, மஞ்சள்பொடி, சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனைக்குப் பிறகு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அலங்காரக் கோலத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல், சித்தாம்பூரில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலிலும் சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.