Enable Javscript for better performance
பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி புதிய கட்டடத் திறப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி புதிய கட்டடத் திறப்பு விழா

    By DIN  |   Published on : 06th April 2018 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்குப் புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி வியாழக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
    திருத்துறைப்பூண்டியில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி 2011-இல் தொடங்கப்பட்டு, திருக்குளத்துக்கு எதிரே உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. 
    தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மேற்கொண்ட நடவடிக்கையால், திருத்துறைப்பூண்டி -திருவாரூர் சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் ரூ7.25 கோடி மதிப்பில் கல்லூரிக்குப் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
    இக்கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, சென்னையில் காணொலிக் காட்சி மூலமாக வியாழக்கிழமை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, புதிய கல்லூரி கட்டட வளாகத்தில், கல்லூரி  முதல்வர் பழ. கௌதமன், வட்டாட்சியர் கே. மகேஷ்குமார் உள்ளிட்டோர் மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கி மரக்கன்றுகளை நட்டனர்.
    இந்நிகழ்ச்சியில், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் டி.ஜி. சண்முகசுந்தர், நில வள வங்கித் தலைவர் கே. சிங்காரவேலு மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai