Enable Javscript for better performance
பிரதமரின் உருவ பொம்மையை எரித்த 50 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் வியாழக்கிழமை பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து சாலை மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த 50 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
    இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சியில் 50 பேர் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை ஊர்வலமாக பேருந்து நிலையத்துக்கு எடுத்து வந்து எரித்தனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர். 
    இதையடுத்து, போராட்டக் குழுவினர் சாலை மறியல் செய்ய முயன்றபோது, போலீஸார் அனைவரையும் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai