Enable Javscript for better performance
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து  எரவாஞ்சேரியில் வியாழக்கிழமை திமுகவினர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி குடவாசல் வட்டத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், குடவாசல் அருகேயுள்ள எரவாஞ்சேரியில் திமுக ஒன்றியச் செயலர் ஜோதிராமன் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாக சென்று எரவாஞ்சேரியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai